Gathering Evidence

சாட்சியங்களை சேகரித்தல்

සාක්ෂි ගොනු කිරීම

Buried Wounds : Sri Lanka's Cluster Munition Victims

புதைக்கப்பட்ட காயங்கள்: கொத்துக்குண்டால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள்

යටපත් තුවාල: ශ්‍රී ලංකාවේ පොකුරු වෙඩි වින්දිතයෝ

The President of the Convention on Cluster Munitions – Sri Lanka – has failed to come clean about the existence of cluster victims on its soil. While heading the 100-member treaty body,  Sri Lanka declared there simply were no victims and therefore no need for victim assistance. 

This flies in the face of the testimonies of scores of war survivors, including UN and de-mining staff inside and outside Sri Lanka - testimonies that bear witness to multiple casualties caused by cluster munitions attacks during the final phase of the civil war in 2009.  Buried Wounds: Sri Lanka’s Cluster Munition Victims is a preliminary report commissioned by the International Truth and Justice Project based on interviews conducted by activists inside Sri Lanka. Eighteen Tamil war survivors in the north of the island describe their injuries from cluster munitions in February and March 2009. 

கொத்துக் குண்டுகள் மீதான உடன்படிக்கையின் தலைவரான இலங்கை தனது மண்ணில் கொத்துக் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பது பற்றிய உண்மையை கூறத்தவறிவிட்டது. 100 உறுப்பினர்களைக் கொண்ட சபையிற்கு தலைமைதாங்கும் அதேவேளையில் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் இல்லை எனவும் ஆகவே பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி எதுவும் தேவையில்லை எனவும் இலங்கை அறிவித்தது.


இது இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள ஐ நா மற்றும் கண்ணிவெடியகற்றும் பணியாளர்கள் உட்பட போரில் தப்பிப்பிழைத்த பலரின் வாக்குமூலங்களுக்கு எதிரானதாக உள்ளது – 2009 இல் சிவில்ப் போரின் இறுதிக்கட்டத்தில் கொத்துக்குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட பல்வேறு இழப்புக்களுக்கு சாட்சியமாக இந்த வாக்குமூலங்கள் உள்ளன. புதைக்கப்பட்ட காயங்கள்: இலங்கையின் கொத்துக்குண்டினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது இலங்கைக்கு உள்ளே செயற்பாட்டாளர்களால் நடாத்தப்பட்ட நேர்காணல்களை அடிப்படையாக கொண்டு சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் உருவாக்கப்பட்ட ஆரம்பக்கட்ட அறிக்கையாகும். தீவின் வடக்கில் போரில் தப்பிப்பிழைத்த 18 தமிழர்கள் பெப்ரவரி மற்றும் மார்ச் 2009 இல் கொத்துக்குண்டுகளால் ஏற்பட்ட தமது காயங்களை விபரிக்கின்றார்கள்.


පොකුරු වෙඩි පිළිබඳ සම්මුතියේ සභාපති ධුරය දරන ශ්‍රී ලංකාව සිය භූමියේ දිවි ගෙවන පොකුරු වෙඩි වැදුන'වුන් සම්බන්ධයෙන් අවංක වීමට අසමත් වී සිටී.  සාමාජිකයන් 100 කින් සමන්විත සම්මුතියේ නායකත්වය දරමින් ශ්‍රී ලංකාව ප්‍රකාශ කර සිටියේ කිසිම වින්දිතයකු නැති හෙයින් වින්දිතයන් වෙනුවෙන් දෙනු ලබන  ආධාර අනවශ්‍ය බවයි. 

මෙය යුද්ධයෙන් දිවි ගලවාගත් විශාල සංඛ්‍යාවකගේ මෙන්ම රට තුලත්, ඉන් පිටතත් සිටින එක්සත් ජාතීන්ගේ සහ බිම් බෝම්බ ඉවත් කරන කාර්ය මණ්ඩල වලත් සාක්ෂි වාචක වල මුහුණට දමා ගැසීමකි. එම ප්‍රකාශ වලින් සාක්ෂි දැරෙන්නේ  සිවිල් යුද්ධයේ අවසාන භාගය වූ 2009 දී පොකුරු වෙඩි වැදී බොහෝ දෙනකුට සිදුවූ හානි ගැනය. යටපත් තුවාල: ශ්‍රී ලංකාවේ පොකුරු වෙඩි වින්දිතයෝ ශ්‍රී ලංකාව තුළ ක්‍රියාධාරීන් විසින් කරන ලද සම්මුඛ සාකච්ඡා පදනම් කොටගෙන සම්පාදනය කරන ලද මූලික වාර්තාවකි. 2009 පෙබරවාරියේ හා මාර්තුවේ දී පොකුරු වෙඩි වැදී සිදුවූ තුවාල පිළිබඳව යුද්ධයෙන් දිවි බෙබෙරා ගත් දෙමළ දහ අට දෙනෙක් මෙහි විස්තර කරති.